Suganthini Ratnam / 2017 ஜூலை 04 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா
தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்டுள்ள பரீட்சைத் தடையை நீக்கி, பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கக் கோரி அப்பீடத்தின்; முதலாம் வருட மாணவர்கள், ஒலுவில் வளாக தொழில்நுட்பவியல் பீடத்துக்கு முன்பாக இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்னர்.
தொழில்நுட்பப் பீடத்தின் முதலாம்; வருட மாணவர்களுக்கான முதலாவது பரீட்சை இன்று ஆரம்பமாகியது. இந்நிலையில், 75 மாணவர்களுக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
எந்தவித நிபந்தனையுமின்றி சகல மாணவர்களும் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இல்லாவிடின், தமது சத்தியாக்கிரகப் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஜீ.எம்.தாரிக்கிடம் வினவியபோது, 'விரிவுரைகள், வெளிக்கல பயிற்சிகள், பாடவிதான செயற்பாடுகளில் குறிப்பிட்ட மாணவர்களின் 80 சதவீதமான வரவு போதாமையால் அம்மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்குரிய அனுமதி அட்டைகள் வழங்கப்படவில்லை.
மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்டத்துக்கு அமைய 80 சதவீதத்துக்குப் குறைவான வரவைக் கொண்ட மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கு எப்பல்கலைக்கழகத்திலும் அனுமதி வழங்கப்படுவதில்லை' என்றார்.

9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026