2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே மோதல்; 9 மாணவர்கள் வைத்தியசாலையில்

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

 

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியல் பீட மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சோந்த இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் படுகாயமடைந்த தொழில்நுட்பவியல் பீடத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஒலுவில் வளாகத்தில் நேற்று  (02) இரவு 10  மணியளவில் பொறியியல் பீட மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்து விடுதியில் தங்கிருந்த தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் பொறியல் பீட மாணவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினாலேயே, இம்மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பொலிஸார் ஆகியோர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .