2025 மே 01, வியாழக்கிழமை

பல்கலைக்கழக மாணவர்களுக்கு சரீரப்பிணை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜனவரி 06 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல், கடுமையாக எச்சரித்து, சரீரப்பிணையில் நேற்று (05) விடுதலை செய்துள்ளார்.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இயங்கிவரும் நிர்வாக பிரிவு கட்டடத்தினுள் அத்துமீறி நுழைந்து, கடமைகளைச் செய்யவிடாத குற்றச்சாட்டின் பேரிலேயே, மேற்படி அழைப்பாணை விடுக்கப்பட்டது.  

பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த 05 மாணவர்களுக்கு வகுப்புத தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை இரத்துச் செய்யுமாறு கோரி, கடந்த புதன்கிழமை (27) முதல் பல்கலைக்கழக நிருவாக கட்டடத்தினுள் தொடர்ச்சியான மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மாணவர்கள் அத்துமீறி நுழைந்து தொடர்ச்சியான மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், பல்கலைக்கழக நிர்வாக கடமைகளை செய்யமுடியாது போயிருந்தது.

இதையடுத்து, மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம், நிர்வாக கட்டடத்தை ஆக்கிரமித்துப் போராட்டம் நடத்தி வந்த 58 மாணவர்களையும் நேற்று நீதிமன்றில் ஆஜராகுமாறு தனித்தனியாக கடந்த புதன்கிழமை (03) அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஒவ்வொரு மாணவரும் சொந்த பிணையில் செல்லுமாறும், ஒவ்வொரு 15 நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டுமெனவும் உத்தரவிட்டு, மாணவர்கள் கடும் எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களது கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் மிக விரைவாக நடவடிக்கை எடுத்து, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்க வேண்டுமெனவும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .