2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பஸ் குடைசாய்ந்ததில் சுமார் 35 பேர் படுகாயம்

Suganthini Ratnam   / 2017 ஜூலை 26 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று இன்று அதிகாலை  குடைசாய்ந்ததில்,  அதில் பயணித்த சுமார் 35 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், என  பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமத்திலிருந்து வாழைச்சேனை நோக்கி, சம்மாந்துறை –மல்வத்தைப் பிரதான வீதியால் பயணித்த இந்த பஸ் குடைசாய்ந்து வயல்வெளிக்குள் விழுந்துள்ளது.

மேற்படி பஸ், வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்குக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .