Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பகுதியிலிருந்து தோப்பூர் ஊடாக வெருகல் பகுதிக்கான பஸ் சேவையொன்றை ஆரம்பிக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சம்பூர்,பள்ளிக்குடியிருப்பு,தோப்பூர் பகுதிகளைச் சேர்ந்த பலர் வெருகலில் உள்ள பிரதேச செயலகம்,பிரதேச சபை,பாடசாலைகள் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களில் கடமை புரிவதோடு வெருகலுக்கான பஸ் சேவை இல்லாமையினால் பிரயாணிகள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. மேலும், சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் வெருகல் சித்திரம்பதி ஆலயமும் வெருகல் பகுதியில் காணப்படுவதால் பஸ் சேவை மூலமாக வெருகல் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களும் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே வெருகல் - சம்பூர் பஸ் சேவையினை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago