Princiya Dixci / 2021 ஜூன் 30 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாணத்தில் பொதுப் போக்குவரத்துக் சேவையில் ஈடுபடும் பஸ்களில் ஆசனங்களுக்கேற்ப பிரயாணிகள் ஏற்றப்பட வேண்டுமெனவும், பிரயாணிகள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக், இன்று (30) தெரிவித்தார்.
நாட்டில் தற்போது கொரோனா தொற்றுத் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்து பஸ்களில் பயணிக்கும் பிரயாணிகள் சமூக இடைவெளியைப் பேணி, முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற பஸ்களை பரிசோதிப்பதற்கு பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
சுகாதார நடைமுறைகளைப் பேணப்படாத பஸ்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அதன் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு எதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
26 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago