Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைகள் செல்லாத பிள்ளைகள் தொடர்பாக வலயக் கல்வி அலுவகத்துக்குப் பெற்றோர்கள் அறிவிக்க வேண்டுமென, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் முறை சாராக் கல்வி உதவிப் பணிப்பாளர் எம்.எல். லாபீர் தெரிவித்தார்.
கட்டாயக் கல்வியின் அவசியம் தொடர்பாக பெற்றோர்களுக்கான விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு, பாலமுனை அல்-ஹிக்மா பாடசாலை வளாகத்தில், அதிபர் எம்.எச். அப்துல் றகுமான் தலைமையில், நேற்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“சிறந்த கல்வியாளர்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதை யாரும் உதாசீனம் செய்ய முடியாது. பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள், பிள்ளைகளின் நடத்தையில் கவனமாக செயற்பட வேண்டும்.
“இன்று சில வீடுகளில் இரவு நேரத்தில் பெற்றோர்களுடன் சேர்ந்து பிள்ளைகள் தொலைக்காட்சியைப் பார்ப்பதால், பிள்ளைகளது எதிர்காலமும், கல்வியும் பெற்றோர்களாலேயே சீரழிக்கப்படுகின்றன.
“பெற்றோர்கள் வீடுகளில் பிள்ளைகளிடத்தில் நல்ல வார்த்தைப் பிரயோகங்களை பேச வேண்டும். அப்போதுதான் அந்தப் பிள்ளை எல்லோரும் விரும்பக் கூடிய பிள்ளையாக வளரும்.
“இலங்கையைப் பொறுத்த வரை இன்று சிறுவர்களின் பாதுகாப்பு, அவர்களின் உரிமையும் கேள்விக் குறியாக எம்மத்தியில் காணப்படுகின்றது.
“அனேகமான பிரதேசங்களில் சிறுவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு சிறுவர்களுக்கெதிரான வன்மறைகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்துவது, பெற்றோர்களின் கைகளில் தங்கியுள்ளது.
“ஒரு கிராமத்தின் வளர்ச்சியும், சமூகத்தின் வளர்ச்சியும் அக்கிராமத்தில் உருவாகின்ற கல்வியாளர்களிலேயே தங்கியுள்ளது.
“பிள்ளைகளின் உரிமையைப் பாதுகாத்து, அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவது ஒவ்வொருபெற்றோரின் கடமையாகும்” என்றார்.
11 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago