Editorial / 2021 டிசெம்பர் 23 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
திடீர் வானிலை மாற்றம் காரணமாக, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பாரிய மீன்கள் பிடிபடுகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான பாரிய பாரை மீன்கள், வளையா மீன்கள் மற்றும் சுறா மீன்கள் என கரை வலைகள் மூலம் பிடிக்கப்பட்டு, பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டன.
இன்றும் (23) இவ்வாறு சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் பாரை இன மீன்கள் அதிகளவாக கரை வலைகளுக்கு பிடிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குறித்த பாரை மீன் ஒன்றின் பெறுமதி சுமார் 1,000 ரூபாய் முதல் 1,200 வரை விற்பனையாவதுடன், இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களால் ஒரு மீனவரின் நாள் வருமானமாக 4 முதல் 5 இலட்சமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது கல்முனை கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில், கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறான பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
17 minute ago
53 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
53 minute ago
3 hours ago
3 hours ago