2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பிள்ளையர் சிலை உடைத்து சேதம்

Editorial   / 2021 டிசெம்பர் 17 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
 
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள  கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்றள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
 
திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில குடியிருப்புக்கள் இல்லாத பகுதியில்  பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன, பிள்ளையார் சிலை ஒன்றை அமைத்ததையடுத்து  அதனை அந்த பிரதான வீதி ஊடாக பிரயாணிக்கும் மக்கள் வழிபட்டு வழிபட்டுவந்தனர்.
 
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு குறித்த பிள்ளையர் சிலையின் கை, தும்பிக்கை போன்றவற்றை இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.   
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X