Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 20 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் விடயத்தில், புதிதாக தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய பயிலுநர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மேற்படி சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.முஹம்மது முக்தார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
“கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் பட்டதாரி பயிலுநர்களில் பெரும்பாலானோர் அவரவர் கடமையாற்றும் பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
“இதேபோல் கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளில் பயிலுநர்களாக கடமையாற்றிய பட்டதாரி பயிலுநர்களில் பெரும்பாலானோர் அப்பாடசாலைகளிலேயே அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
“ஆனால், ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் வேலைத் திட்டத்தின் கீழ் அண்மையில் கிழக்கு மாகாணத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய பட்டதாரி பயிலுநர்கள் மட்டும் அங்கிருந்து அகற்றப்பட்டு, வேறு திணைக்களங்களுக்கு நிரந்தர நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது இவர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் பெரும் அநீதியாகும்.
“கிழக்கில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றி வந்த பட்டதாரி பயிலுநர்கள் அப்பாடசாலைகளிலேயே நிரந்தரமாக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் விரும்பினால் மாத்திரமே வேறு திணைக்களங்களுக்கு இணைக்கப்படல் வேண்டும்.
“ஏனைய மாகாணங்களில் இந்நடைமுறை பின்பற்றப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் மட்டும் அநீதி இழைக்கப்பட்டிருப்ப மிகவும் கவலைக்குரிய விடயமாகும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
56 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
2 hours ago