Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஜூலை 07 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, நூருல் ஹுதா உமர்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஐவர், பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
கலாநிதி எஸ்.குணபாலன்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதியாக இரு தடவைகள் கடமையாற்றிய கலாநிதி எஸ்.குணபாலன், தனது நிர்வாக மானி சிறப்புப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் முதுமானிப் பட்டத்தை களனி மற்றும் இந்தியாவின் அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். கலாநிதிப் பட்டத்தை இந்தியாவின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் இவர் பெற்றுள்ளார்.
கலாநிதி ஏ.எம்.றஸ்மி
தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் புள்ளிவிவரவியல் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் கலாநிதி ஏ.எம்.றஸ்மி இப்பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாகவும் துறைத்தலைவராககவும் கடமையாற்றியுள்ளார்.
இவர், பேராதெனிய பல்கலைக்கழகம், சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் என்பவற்றில் துறைசார் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
கலாநிதி எம்.ஐ.எம்.ஹிலால்
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம்.ஹிலால், சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
தனது இளமானி பட்டத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் முதுமானி பட்டத்தை களனி பல்கலைக்கழகத்திலும் பெற்றிருந்தார். இவர், இரண்டு முறை தொடர்ச்சியாக சிறந்த ஆராய்ச்சிக்கான உபவேந்தர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
கலாநிதி எம்.எம்.பாஸில்
அரசறிவியல் துறைத் தலைவராக கடமையாற்றி வருகின்ற கலாநிதி எம்.எம்.பாஸில், அரசறிவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான இவர், ஜப்பான் மேஜி பல்கலைக்கழகம், மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் பட்டப்பின்படிப்புக் கற்கையை நிறைவு செய்தவர்.
கலாநிதி சப்ராஸ் நவாஸ்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ தகவல் தொழில்நுட்பத் திணைக்களத்தின் தலைவராக கடமையாற்றி வருகின்ற கலாநிதி சப்ராஸ் நவாஸ், இப்பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக மானி சிறப்புப் பட்டத்தையும் இலங்கைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
25 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago