Janu / 2024 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹாஓயா அரலகங்வில வீதியின் எம்.ஜி.கே ஏரிச் சந்திக்கு அருகில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்து மஹா ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 2 ஆண்கள், 12 பெண்கள், 6 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஹா ஓயாவிலிருந்து அரலகங்வில நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், எதிர்திசையில் இருந்து வந்த மற்றுமொரு தனியார் பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாகவும் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
2 hours ago
09 Mar 2026
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
09 Mar 2026
09 Mar 2026