2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொது இடங்களில் கட்டாய தடுப்பூசி அட்டை சோதனை

Editorial   / 2022 ஜனவரி 16 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் பொது இடங்களில் கொவிட்19 தடுப்பூசி அட்டை சோதிக்கப்பட்டு வருவதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி டொக்டர் ஜீ.சுகுணன் இன்று (16) தெரிவித்தார்.

சந்தைத் தொகுதிகளில் மற்றும் சன நெருக்கமான பொது இடங்களில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தன் வசம் கொவிட்19 தடுப்பூசி அட்டை உள்ளதா என சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே, 20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்கள் இதுவரை எவ்விதத் தடுப்பூசியும் பெற்றுக் கொள்ளாதவர்கள் தத்தமது பிரிவிலுள்ள சுகாதார வைத்தியதிகாரி காரியாலயத்துடன் தொடர்புகொண்டு, அது தொடா்பான தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

அதேவேளை, தற்போது மக்கள் கனிசமாக ஒன்றுகூடுவதாகவும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமலும் கவனயீனமாக நடந்து கொள்வதை காணக் கூடியதாகவுள்ளதாகவும் பணிப்பாளர் சாடினார்.

இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டால் எதிர்காலத்தில் பாரிய பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ் நிலை ஏற்படலாம். ஆகவே, இவற்றை கருத்திற்கொண்டு மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டுமென கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .