Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 12 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு, இலவச தபால் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தபால் மா அதிபதி ரஞ்ஜித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றுநிரூபம், சகல மாகாணப் பிரதி தபால் மா அதிபதிகளுக்கும், பிரதேச தபால் அத்தியட்சகர்கள், தபால் அதிபர்கள், உப தபால் அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாவட்ட தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள், மாவட்ட பிரதி, உதவி தேர்தல் ஆணையாளர்கள் போன்றவர்களால் அனுப்பப்படும் கடிதங்கள், பொதிகள், ஆவணங்களையும், முன்னுரிமையளித்து, முதல் தபாலிலேயே அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபதி தெரிவித்தார்.
அதேபோன்று, கிராம உத்தியோகத்தர்களுக்கு, மாவட்டத் தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்களுக்கு, பிரதி, உதவி தேர்தல் ஆணையாளருக்கு அனுப்புவதற்காக தபால் இடப்பட்ட பொதிகள், கடிதங்களுக்கும் முன்னுரிமையளிக்கப்படவுள்ளன.
மேலும் தேர்தல் பணிக்காக வேறு அரச திணைக்களங்கள், அமைச்சுக்களிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்ழுவுக்கு அனுப்பப்படும் கடித ஆவணங்களும் மேற்படி முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவடைந்து ஒரு மாதம் வரை இந்த இலவச தபால் வசதி அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
26 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago