Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் டெங்கு நோய் அபாயம் காணப்படுவதால் பொது மக்கள் டெங்கு நுளம்புகள் பரவக் கூடிய இடங்களை துப்புரவு செய்யுமாறு பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.யூ. அப்துல் சமட் நேற்று செவ்வாய்க்கிழமை (16) அறிவித்துள்ளார்.
பாவிக்காமல் கைவிடப்பட்டுள்ள குடிநீர் கிணறுகளை மூடி வைக்குமாறும், தென்னம் குரும்பை, யோகட் கப், வெற்று போத்தல்கள், வெற்று டயர்கள், பொலிதீன் கழிவுகள் போன்ற கழிவுகளை முறையாக அகற்ற வேண்டுமென அறிவித்த சுகாதார வைத்தியதிகாரி, சுற்றுப்புறத்தில் தேங்கும் நீர் நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப் படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல் போன்றவற்றை செய்தால் , நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத் முடியுமெனவும் சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.யூ. அப்துல் சமட் அறிவித்துள்ளார். ஒரு வாரத்துக்கு ஒரு தடவையாவது சுற்றுப் புறச் சூழலை கண்காணிப்பதோடு வீதிகளிலோ, பொது இடங்களிலோ பிறர் மூலம் சேர்க்கப்பட்ட டெங்கு நுளம்பு பெருகும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
வெற்றுக் காணிகளை வைத்திருப்போர் ஒரு வார காலத்திற்குள் காணிகளை டெங்கு நுளம்பு பெருகுவதை தடுக்கும் பொருட்டு துப்புரவு செய்யுமாறும் கேட்டுள்ளார். டெங்கு நுளம்பு பரவக் கூடிய வகையில் வெற்றுக் காணிகளை வைத்திருப்பவர்கள் காணிகளை துப்புரவு செய்யப்பட வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.யூ. அப்துல் சமட் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago