2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் செயற்பாடு வழமையில்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகள் வழமை போன்று இயங்கி வருவதாக, பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், இன்று (13) தெரிவித்தார்.

பொத்துவில்  ஆதார வைத்தியசாலையில் கடமையற்றிய ஊழியர் ஒருவருக்கு, வெள்ளிக்கிழமை (11) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையை அடுத்து, வைத்தியசாலையில் கடமையாற்றும் 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும், வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு உட்பட சகல பிரிவுகளும் வழமை போன்று இயங்கி வருவதாகவும், வைத்தியசாலையின் எந்தப் பிரிவும் மூடப்படவில்லையெனவும் கூறினார். 

நோயாளர்கள் அச்சமடையாமல் சுகாதரா நடைமுறைகளைப் பேணி வைத்தியசாலைக்கு வர முடியுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X