2025 மே 03, சனிக்கிழமை

பொத்துவில் பகுதியிலும் டெங்கொழிப்பு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

தேசிய டெங்கொழிப்பு வேலைத்திட்டத்துக்கமைவாக, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் எல்லைக்குட்பட்பட்ட பிரதேசங்களில் டெங்கொழிப்பு  வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவில் பிரதேசத்தில் இவ்வருடம் ஆரம்பம் முதல் இதுவரை 66 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழலைக் கொண்டிருந்த 156 குடும்பத்தவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 32 பேருக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.யு.அப்துல் சமட் தலைமையிலான் முன்னெடுக்கப்பட்ட இந்த டெங்கொழிப்பு வேலைத் திட்டத்தின்போது, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார பூச்சியியல் உத்தியோகத்தர்கள், பொலிஸார், சிவில் சமூகத்தினர் ஆகியோர் இணைந்திருந்தனர்.

பொத்துவில் பிரதேசத்திலுள்ள 27 கிராம சேவகர் பிரிவுகளிலும் டெங்கொழிப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளன. 

இதற்கமைவாக, பொத்துவில், களப்புக்கட்டுப் பிரதேசத்திலுள்ள வீடுகள், வெற்றுக் காணிகள், மதஸ்தலங்கள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றில் டெங்கொழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X