2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பொத்துவில் பகுதியில் முன்னெச்சரிக்கை

Princiya Dixci   / 2020 நவம்பர் 30 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, பொத்துவில் பிரதேசத்திலுள்ள சகல உணவகங்கள், சிகை அலங்கார நிலையங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், பொதுச்சந்தை, மீன் சந்தை, இறைச்சிக் கடைகள் மற்றும் ஏனைய பலசரக்குக் கடைகளை தற்காலிகமாக மறு அறிவித்தல் வரை மூடுமாறும், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

பொத்துவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரத்தியோக கல்வி நிலையங்கள், முன்பள்ளிகள், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் மத்ரசாக்கள் என்பவற்றினை மறுஅறிவித்தல்  வரை மூடுமாறும் அறிவித்துள்ளார்.

களியாட்ட நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், கலாசார நிகழ்வுகள் மற்றும் மக்கள் ஒன்று கூடக்கூடிய வகையிலான நிகழ்வுகள் என்பவற்றிலிருந்து தவிர்ந்துகொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X