Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Princiya Dixci / 2022 மே 17 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
நாட்டு மக்களுக்காக பொருளாதார நெருக்கடி அனைத்தும் அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக இருப்பதாக தேசிய காங்கிரஸின் சட்டம் மற்றும் கொள்கை விவகார ஆலோசகர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தெரிவித்தார்.
நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகவே தேசிய காங்கிரஸ் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சவால்களை எதிர்கொள்ள புதிய பிரதமர் நியமனத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் தேசிய காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் தொடர்பில் கட்சியின் உயர்பீடத்தில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
உயர் பீடம், தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தலைமையில், கொழும்பில் நேற்று (16) மாலை கூடியதாகவும் மர்சூம் மௌலானா தெரிவித்தார்.
தொடர்ந்தும் இது தொடர்பில் தெரிவித்து அவர், “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தில், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களுக்கான உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, புதிய பிரதமரின் செயற்றிட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான முடிவை தேசிய காங்கிரஸின் உயர்பீடம் எட்டியுள்ளது.
மேலும், “பாராளுமன்றத்தில் ஒன்றாகச் செயற்படும் சக 10 கட்சிகளோடு இணைந்து, தேசிய காங்கிரஸின் கொள்கைகளுக்கு அமைவாக, ஒவ்வொரு விடயதானத்தையும் தனித்தனியாகக் கருத்திற்கொண்டு, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கும் கட்சி உயர் பீடம் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2025