Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
அஸ்லம் எஸ்.மௌலானா / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கமைவாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், சாய்ந்தமருது பொலிவேரியன் பிரதேசக் குளக்கரைக்கு கேபியன் சுவர் அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, குளங்களைப் புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், சாய்ந்தமருது வொலிவேரியன் தெற்குப்புறப் பாலத்தை அண்மித்த குளக்கரைப் பிரதேசத்திலிருந்து 80 மீற்றர் தூரத்துக்கு, குறித்த கேபியன் சுவர் அமைக்கப்படவுள்ளது.
இதன்மூலம், அப்பிரதேசச் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், பொலிவேரியன் நுழைவாயில் பிரதேசத்தின் முகத்தோற்றம் எழில்பெறுமெனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த குளக்கரைப் பிரதேசமானது மாசடைந்து, வெள்ளப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக, பிரதியமைச்சர் ஹரீஸின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பரிந்துரைக்கமைவாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago