எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஜூலை 19 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்மாந்துறை பிரதேசத்தில், அம்பாறை போதைப்பொருள் குற்றத்தடுப்பு விசேட பொலிஸாரைத் தாக்கி, வாகனத்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 1ஆவது சந்தேகநபரை, ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் எச்.எம்.எம்.பஸீல், உத்தரவிட்டார்.
சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக, கடந்த 2016 ஜூலை மாதம் 17ஆம் திகதியன்று, அம்பாறை போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது தாக்குதல் நடத்தி, வாகனத்துக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.
இதையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, 4 உறவினர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026