Princiya Dixci / 2021 மே 04 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் போதைப்பொருள்களுடன் நால்வர், நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து ஹெரோய்ன், கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முளை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து, விசேட புலனாய்வு பிரிவின் பொலிஸாருடன் இணைந்து சாய்ந்தமரு வேப்பையடி வீதியில் உள்ள வீடொன்று, நேற்று சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது அங்கு ஐஸ் போதைபொருள் வியாபாராத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 330 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளை மீட்டனர்.
அதேவேளை, இஸ்லாபாத்தைச் சேர்ந்த ஒருவரை 60 மில்லிக்கிராம் ஹெரோய்னுடனும், கடற்கரைப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஒருவரை 350 மில்லிக்கிராம் கேரளா கஞ்சாவுடனும், மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை 1,490 மில்லிக்கிராம் ஹெரோய்னுடன் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்தவர்கள் 20 தொடக்கம் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் மேலதிக சட்ட நவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago