2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

முத்திரை வரி, தண்டப்பணம் கையளிப்பதில் தாமதம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 26 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கான முத்திரை வரி மற்றும் நீதிமன்ற தண்டப்பணம் ஆகியவற்றை கையளிப்புச் செய்வதில் ஏற்படும் தாமதத்தைக் கண்டறிந்து, அதை நிவர்த்தி செய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பான அறிக்கையை இரு வார காலத்தினுள் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின்; செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் பணித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல், கிழக்கு மாகாண முதலமைச்சரின்; அலுவலகக் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (25) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உள்ளூராட்சி மன்றங்களின் முத்திரை வரி, நீதிமன்ற தண்டப்பணம் ஆகியவற்றை கையளிப்பதற்கு தற்போது பின்பற்றப்படும் நடைமுறை பற்றியும் அவற்றைத் துரிதப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும்; இதன்போது ஆராயப்பட்டன.

முத்திரைவரி மற்றும் தண்டப்பணம் உரிய காலத்தினுள்  உள்ளூராட்சி மன்றங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கான பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதற்காக சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளையும்  உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடலை மாவட்டம் தோறும் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .