2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் நீதவானை ஏசியவருக்கு சிறை

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 04 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவனாக கடமையாற்றிய முன்னாள் நீதவானுக்கு நீதிமன்றில் வைத்து ஏசிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 01 வருட சிறைத்தண்டனை வழங்கி அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி நேற்று  வியாழக்கிழமை (03) தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2015.07.15ஆம் திகதி நீதிமன்றுக்கு விசாரணைக்காக வந்த நபர் நீதவானை திறந்த நீதிமன்றில் வைத்து ஏசிய குற்றத்துக்காக  குறித்த நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அரச கடமையை செய்ய விடாது தடுத்தல், நீதித்துறையை சீர்குலைத்து அவமதித்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கு அமைய இவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .