2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

முன்னாள் போராளி மீது தாக்குதல்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கனகராசா சரவணன் 

அக்கரைப்பற்று மாநகரசபை பொதுச் சந்தையில் பிளாஸ்ரிக் பொருட்களை விற்பனை செய்துவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவரை, சந்தையிலிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ள இனந்தெரியாதோர் சிலர், அவரது பொருட்களையும் எடுத்து வீசிவிட்டு அவரையும் தாக்கியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நேற்று புதன்கிழமை (23) இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில், விநாயகபுரத்தைச் சேர்ந்த 35 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே பாதிக்கப்பட்டவராவார். 

யுத்தத்தில் ஒரு காலை இழந்துள்ள இவர், முகாமில் இருந்து 2010ஆம் ஆண்டில் விடுதலை பெற்று குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வருகின்ற அவர், வாழ்வாதாரத் தொழிலாக அக்கரைப்பற்று மாநரசபை பொதுச் சந்தையில்  கடந்த 5 வருடங்களாக பிளாஸ்ரிக் பொருட்களை விற்பனை செய்து வருகின்றார். 

கடந்த 21ஆம் திகதியன், அப்பகுதியில் வேறு பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் சிலர் இனவாதம் பேசி அங்கிருந்து அவரை வெளியேறுமாறு தாக்கியுள்ளனர். இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டதை அடுத்து அடுத்த நாளன்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ள பொலிஸார், மேற்படி போராளியையும் தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதித்தனர். 

இந்நிலையில், 23ஆம் திகதி பொலிஸாருடன் அங்கு சென்று வியாபாரம் செய்ய அவர் ஆரம்பித்த போதிலும், பொலிஸார் அங்கிருந்த சென்றவுடன் மீண்டும் அவர் மீது மேற்படி நபர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இது தொடர்பில் மீண்டும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X