Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
ஒலுவில் துறைமுகத்தை, மீனவர் துறைமுகமாக இயங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதாக கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
பாலமுனை அஷ்ரி அஸாம் எழுதிய 'இது ஒரு தருணம்' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா, பாலமுனை இப்னு சீனா கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (21) மாலை நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கலாபூஷணம் பாலமுனை பாறூக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பின் காரணமாக ஏற்பட்ட தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பாலமுனை, ஒலுவில் மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்களின் விடிவுக்காக அமைச்சரவை உபகுழு அமைத்து, வேலைத்திட்டம் நடைபெறுகிறது.
ஒலுவில் துறைமுகம் தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தினூடாக இந்தப் பிரதேசத்தில் பாதிப்புக்களை அடைந்திருந்த மீனவர் சமூகம் விமோசனங்களை அடைந்து கொள்ளும்.
அதன் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான அங்கிகாரமாக இந்த அமைச்சரவைப் பத்திரம் அமைந்து காணப்படுகிறது. அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினாக உள்ள நானும் இதற்கான பங்களிப்புக்களை நிச்சயம் செய்வேன்.
கடந்த 16 வருடங்களாக யாரும் கவனிக்கமாமலிருந்த துறைமுகம் மற்றும் துறைமுகத்தினால் ஏற்பட்ட தாக்கம், மீனவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்பவற்றுக்கு இன்னும் ஒரு சில மாதங்களில் நிரந்தர தீர்வு கிட்டும். இன்னும் ஒரு சில வருடங்களில் இப்பிரச்சினைகளைகளையெல்லாம் தீர்க்கக்கூடிய நிலைமை, நல்லாட்சி அரசாங்கத்தில் உருவாகும்.
ஒரு படைப்பாளி தனது படைப்பை வெளிக்கொணருவது ஒன்றும் சாதாரண விடயமல்ல. அது மிகக் கஷ்டமானதொரு நிலையாகும். இன்று பாலமுனை அஷ்ரி அஸாம் எழுதிய 'இது ஒரு தருணம்' கவிதை நூல் பல நல்ல விடயங்களை உள்ளடக்கியுள்ளதுடன், அவர் ஒரு ஆற்றலுள்ள கவிஞராக திகழ்வார் என இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்துகின்றேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 May 2025
17 May 2025