2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மீலாதுன் நபி விழாவை கண்டியில் நடத்துவதை ஏற்றுகொள்ள முடியாது

Kogilavani   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்  

மீலாதுன் நபி விழாவை தொடர்ச்சியாக கண்டி மாவட்டத்தில் நடத்துவதை ஏற்றுகொள்ள முடியாது என அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்துள்ளார்.

மீலாதுன் நபி விழாவை 3 ஆவது முறையாகவும் கண்டி மாவட்டத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு தொடர்ச்சியாக இந்த விழாவை நடத்துவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நாட்டில் ஏனைய மாவட்டங்களில் பரந்து வாழும் முஸ்லிம்களை புறம்தள்ளுவது மட்டுமல்லாது பின்தங்கிய முஸ்லிம் பிரதேசங்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகும்' என அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'தேசிய மீலாதுன் நபி விழாவை நடத்துவதற்காக வருடா வருடம் அரசாங்கம் சுமார் 300 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை செலவிடுகின்றது. மர்ஹூம் அஸ்ரப்பின்   காலத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் காணப்படும் முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டே மீலாதுன் நபி விழாவுக்கான இடம்தெரிவு செய்யப்படும்.  

இன்று  நிலைமை தலைகீழாகி உள்ளது. இலங்கையின் வசதிகூடிய மாவட்டங்களில் இரண்டாவதாக காணப்படும் கண்டி மாவட்டத்தில் 3 வது முறையாகவும் இந்த மீலாது நபி விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முஸ்லிம் மக்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் சில தலைமைகள் இவ்விடயங்களைக் கருத்தில் கொள்ளாமல் அமைச்சுடன் கூடிய சுகபோகங்கள் கிடைத்தால் போதும் என்று அதில் மூழ்கிக்கிடக்கின்றனர்.  

வாக்களித்த ஏழை மக்களின் அபிவிருத்தியை கவனத்திற்கொண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கவனத்துக்கு இவ்விடயத்தை கொண்டு செல்ல வேண்டும்.  எதிர்வரும் காலங்களிலும் இவ்விடயம் தொடராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்' என அவர் வேண்டுகோள் விடுக்கின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X