2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மொஹிதீன் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மொஹிதீன் கிராமத்துக்கு விரைவில் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜே.என்.கரீம், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

மொஹிதீன் கிராமத்துக்கு சனிக்கிழமை (26)  சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் அங்குள்ள மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு அமைச்சர் பணித்துள்ளார். இந்நிலையில், தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் உயர் அதிகாரிகள் குழு  மேற்படி கிராமத்துக்குச் சென்று பார்வையிடவுள்ளதாக அவர் கூறினார்.

மொஹிதீன் கிராமத்தில் சுமார் 100 வீடுகள் உள்ளன. புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்தவுடன் மேற்கொள்ளப்பட்ட 100 நாள் திட்ட நடவடிக்கைகளின்போது இங்கு சுமார் 70 வீடுகள் அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X