Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அம்பாறை மாவட்ட மாவட்ட விவசாயிகளின் நீண்டகால பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்றை அம்பாறை மாவட்ட விவசாய ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.காதர் சுகாதார பிரதியமைச்சர் பைஷால் காசீமிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளித்துள்ளார்.
அந்த மகஜரில், 'நெல் கொள்வனவும் சந்தைப்படுத்தலும் விவசாயக் காணிகளுக்கான நீர்ப்பாசன வாய்க்கால்கள் மற்றும் வயல்களுக்கிடையே போக்குவரத்துப் பாதைகள் அமைப்பது உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டு கையளிக்கப்பட்டது.
இதன்போது தெரிவித்த சுகாதார பிரதியமைச்சர், 'அம்பாறை மாவட்ட விவசாய ஒன்றியத்தின் நீண்டகால பிரச்சினை குறித்து நான் அறிவேன். இதில் சில பிரச்சினைகள் சம்பந்தமாக ஏற்கனவே குறித்த நிறுவனங்களுடனும் பொறியியலாளர்களுடனும் தொடர்பு கொண்டு அவைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். அவற்றுள் காணி அனுமதிப்பத்திரம், காணி எல்லைகள் சம்பந்தமாக பிரச்சினைகளுக்கு மிகவிரைவில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் காணி அமைச்சர் உள்ளிட்டோர்களுடன் கட்சி விரிவானதும் காத்திரமானதுமான பேச்சுவார்த்தையை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளது' என்றார்.
7 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago