2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘மக்களைப் பாதுகாப்பதற்கு தயார்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தால் விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புத் தினத்தையொட்டியும், சுனாமி பேரலைத் தாக்கத்தின் 13ஆவது ஆண்டு நிறைவையொட்டியும் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தால் நேற்று (25) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“அனர்த்தங்கள் தொடர்பாக முதலில் அதிகாரிகள் அறிந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அறிந்திருந்தால்தான் மக்களுக்கு சரியான நேரத்தில் சரியான தகவல்களை வழங்க முடியும்.

“அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் சுனாமி ஏற்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு மக்கள் பீதியடைந்த நிலையில் காணப்படனர். இவ்வாறான வதந்திகள் மூலம் மக்கள் பீதியடை வேண்டாம்.

“அனர்த்தம் ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவானால் அதனை அரசாங்கம் விரைவாகவும், சரியாகவும் வழங்கும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .