வி.சுகிர்தகுமார் / 2017 நவம்பர் 23 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆலையடிவேம்பு பிரதேச உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக மக்கள் கருத்தறியும் பொதுக் கூட்டம், ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுமென, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
மக்களது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் இக்கூட்டத்தில், கட்சிக்கு விசுவாசமான, புத்திஜீவிகள், இளைஞர்கள், பெண்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பல கேள்விகளுக்கு விடைகாணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்தில் தவறாது கலந்துகொண்டு தங்களது பெறுமதிமிக்க கருத்துகளை தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, ஏனைய பிரதேசங்களிலும் இவ்வாறான கலந்துரையாடல்கள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
5 minute ago
8 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
15 minute ago