2025 மே 02, வெள்ளிக்கிழமை

மண் அரண்மனை கட்டும் போட்டி

Niroshini   / 2017 பெப்ரவரி 05 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சர்வதேசப் பாடசாலையான அக்கரைப்பற்று நவீன பெப்பிள்ஸ் அகடமி ஏற்பாடு செய்த சிறுவர்களினால் மண் அரண்மனை கட்டும் போட்டி, அக்கரைப்பற்று கடற்கரையில் நேற்று(04) மாலை நடைபெற்றது.

பெப்பிள்ஸ் அக்கடமியின் முதன்மை நிறைவேற்று அதிகாரி எம். எஸ். இன்ஸாப் மற்றும் பெப்பிள்ஸ் அக்கடமியின் துணை நிறுவுனர் தாரிக் அஸீஸ் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், ஓய்வுநிலை நுகர்வோர் விவகார பிரதி பணிப்பாளர் எச்.எல். அப்துல் குத்தூஸ், ஓய்வு நிலை நிலஅளவையாளர் ஏ.எல். முகைதீன் பாவா, மாவட்ட புள்ளி விவரவியலாளர் எம்.எம். தையார், ஓய்வு நிலை அதிபர் ஏ.எல்.  றபீக், முன்பராய சிறார்களின் கல்வி தொடர்பாக உதவிக் கல்விப்பணிப்பாளர் என்.  ஜமால்டீன், விவசாய ஆராய்ச்சிகள் நிறுவகத்தின் துணைப் பணிப்பாளர் வை.பி. இக்பால், அக்கரைப்பற்று அஸ்ஸாகிறா வித்தியாலய அதிபர் எம்.ஜ.எம்.இல்யாஸ் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பரிசில்களும், கேடயங்களும் பெப்பிள்ஸ் அக்கடமியினால் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X