Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராஜன் ஹரன்
அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஆறு மற்றும் கடற்பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட எழுவருக்கு, 10,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை அபராதம் விதித்து, மாவட்ட நீதிபதியும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல், நேற்று திங்கட்கிழமை (21) உத்தரவிட்டார்.
ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்தவர்களில் மூவருக்கு தலா 10,000 ரூபாவும் இருவருக்கு 25,000 ரூபாவும், ஒருவருக்கு 50,000 ரூபாவும் மற்றும் கடல் மண் அகழ்வின் போது கைது செய்யப்பட்டவருக்கு 30,000 ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் எழுவரும், ஞாயிற்றுக்கிழமை (20) அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்த மணல் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைக் கைது செய்யவும் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
19 minute ago
24 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
1 hours ago
1 hours ago