2026 ஜனவரி 10, சனிக்கிழமை

மன அழுத்தம் : மாணவர் சடலமாக மீட்பு

Freelancer   / 2026 ஜனவரி 09 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த மணவர் தமது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (9) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

16 வயதுடைய குறித்த மாணவன் கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்திற்கு உள்ளான நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

எவ்வாறாயினும் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டமைக்கான காரணம் மற்றும் மாணவரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .