Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான், எம்.எஸ்.எம். ஹனீபா
கொரோனா வைரஸ் அச்ச நிலையை காரணமாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம், இம்மாதம் 16ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனித உரிமை மீறல் தொடர்பாக முறைப்பாடு செய்ய விரும்புகின்றவர்கள், 1996 என்ற அவசர இலக்கத்துடன் தொடர்புகொண்டு, தமது முறைப்பாட்டை பதிவுசெய்யுமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் அறிவித்துள்ளார்.
மேலும், பதிவு செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கை இலகுபடுத்துவதற்காக 0672229728 என்ற புதிய தொலைநகல் இலக்கமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவசர மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு மகஜர் ஒன்றின் மூலம் சந்திக்க முடியுமெனவும் கல்முனை பிராந்திய இணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.
கடந்த காலங்களிலும் கொரோனா அனர்த்த நிலைமையின் போதும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நற்பிட்டிமுனை பகுதியில் அமைந்துள்ள கல்முனை பிராந்திய அலுவலகம் தற்கொலிகமாக மூடப்பட்டு, மேற்கண்டவாறு நடவடிக்கை எடுக்கப்ட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தககது.
13 minute ago
16 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
21 minute ago