Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 ஜனவரி 16 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதமுனை, அல்மனார் மத்திய கல்லூரியை, தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்லூரிச் சமூகத்தின் வேண்டுகோளின் பேரில், மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் அனுசரணையுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஊடாக தான் மேற்கொண்டு வந்த முயற்சிகள் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் பிரகாரம், மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவது தொடர்பாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமை, அமைச்சர் ஹக்கீம் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை உடனடியாகத் தயாரிக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கல்வி அமைச்சர் உத்தரவிட்டதுடன், அதனை விரைவாக அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதாக உறுதியளித்துள்ளார் எனவும் மேயர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago