Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பொருத்தமான பயனாளிகளுக்கு வழங்குவதற்கு விசேட செயலணி அமைத்து, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், இன்று (22) தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில், அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கடந்த வாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகள், பல வருட காலமாக எவருக்கும் வழங்கப்படாமல் பாழடைந்து காணப்படுகின்றன என்று சுட்டிக்காட்டியதுடன், இனியும் தாமதியாமல் இவ்வீடுகளை பொருத்தமான பயனாளிகளுக்கு கையளிப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகவும் மேயர் றகீப் கூறினார்.
இதற்குப் பதிலளித்து கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க, முன்னர் இவ்வீடுகளை பகிர்ந்தளிப்பதற்காக பயனாளிகள் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டதாகவும் அப்பயனாளிகள் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் அதனால் இந்நடவடிக்கை தடைப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, பொருத்தமான பயனாளிகளைத் தேர்வு செய்து, இவ்வீடுகளை கையளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அடுத்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு முன்னதாக முன்னெடுக்கும் பொருட்டு, விசேட செயலணியொன்றை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டதாகவும் மேயர் றகீப் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
29 minute ago