Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2021 ஜூலை 01 , பி.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
மருதமுனைப் பிரதேசத்தில் இன்று (01)தொடக்கம் ஒரு வார காலத்திற்கு ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதென நேற்று (30) கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் இடம்பெற்ற சுகாதாரத்துறையினருடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் நேற்றும் (30) இன்றும் (01) மருதமுனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையை கவனத்தில் கொண்டு முடக்க நிலையை சுகாதார நிபந்தனைகளுடன் தற்காலிகமாக தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6.30 மணியளவில் கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் சட்டத்தரணி ஏ.எம். றக்கிப் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இம்முடிவுகள் பெறப்பட்டது.
உணவகங்கள் வர்த்தக நிலையங்கள் மாலை 6.00 மணி தொடக்கம் மறுநாள் காலை 6.00 மணி வரை மூடப்பட வேண்டும். குறித்த இந்த காலப்பகுதிக்குள் பொதுமக்கள் நடமாட்டம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. என்ற இறுக்கமான நிபந்தனையுடன் முடக்க நிலை தளர்த்தப்பட்டது.
சட்டத்தை மீறுவோர் மீது எவ்வித கருணையும் காட்டாது பொலிஸார் இராணுவத்தினருடன் இணைந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் இந்த தீர்மானம் மறுபரிசீலனை செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
6 minute ago
2 hours ago
2 hours ago