Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பொதுச் சந்தை, மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்று, அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சக்கி, இன்று புதன்கிழமை (15) தெரிவித்தார்.
நாளை வியாழக்கிழமை (16) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்கு, அக்கரைப்பற்று சிறுவர் பூங்கா, அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பட்டியடிப்பிட்டி பொது விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் தற்காலிக சந்தை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, தங்களுக்குத் தேவையான பொருள்களைக் கொள்வனவு செய்து உடனடியாக திரும்ப வேண்டுமென கேட்டுள்ளார்.
அமுலில் உள்ள ஊரடங்குச்சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படுகின்ற வேளையில், பொதுச் சந்தைகள், வர்த்தக நிலையங்கள், கடைகள் ஏதும் திறக்கக் கூடாதெனவும், இக்காலப்பகுதியில் பொதுமக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை தமது வீடுகளுக்கு முன்னால் வருகின்ற நடமாடும் விற்பனை வியாபாரிகளிடம் கொள்வனவு செய்தற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago