2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மழைக் காலம்; மற்றுமொரு சவால்

Princiya Dixci   / 2021 மே 23 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் மற்றுமொரு சவாலாக டெங்கும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

தற்போது மழைகாலம் ஆரம்பித்து இருப்பதால் டெங்கு பரவும் அபாயம் அதிகமாக உள்ளதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தெரிவித்தார். 

வீடுகள், அலுவலகங்கள் அடங்கலாக நீர்த் தேங்கி, நுளம்புகள் பரவும் இடங்களை உடனடியாக சுத்தம் செய்து, தங்களையும் தங்களது அயலவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு காய்ச்சலால் சிறுவனொருவன் பாதிக்கப்பட்டதையடுத்து, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க, பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம். பைசாலின் தலைமையில் கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மூலம் சாய்ந்தமருதில் பல இடங்களில் தீவிரமான முறையில் புகைவிசிறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .