Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிரந்தரமாக மாடறுக்கும் இடம் நிர்மாணிப்பதற்காக பிரதேச சபையால் தனியாரிடமிருந்து காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இக்காணிக்கான ஆவணத்தை, கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ அஸீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸிடம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் வைத்து நேற்று முன்தினம் (08) மாலை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
முறையான மாடறுக்குமிடம் இல்லாமையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாகவும், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இக்காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ் தெரிவித்தார்.
நீண்டகாலமாக தைக்காநகர் பிரதேசத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் மாடறுக்குமிடம் புதிதாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள காணியில் இதற்கான கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதும் மாற்றப்படுமெனவும் கூறினார்.
தைக்காநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள மாடறுக்கும் மடுவத்தை மாற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago