Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாயக்கல் மலையடியில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த மடாலயத்தை உடன் நிறுத்துமாறு கோரும் மகஜரொன்றை இறக்காமம் பிரதேச சபையிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல்.சமீம் , கடந்த இருவருடங்களுக்கு முன்பு மாயக்கல் மலையடியில் திடீரென வைக்கப்பட்ட பௌத்த புத்தர் சிலையொன்றின் காரணமாக ஏற்பட்ட சர்ச்சைக்குப் பின்னர், தமன பொலிஸாரினால் அம்பாறை நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவின் பேரில் இப்பிரதேசத்திற்குள் எவரும் செல்லக் கூடாதென தடையுத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதானால் அங்கு வாழ்ந்து வரும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சமும், பீதியுமான நிலை தோன்றியுள்ளது.
இக்கட்டட நிர்மாணத்திற்காக அனுமதி வழங்கியது யார் என்பதனை, இறக்காமம் பிரதேச சபை, மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டுமெனவும் இதன் நிர்மாணப் பணியை உடன் தடை செய்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் கோரும் மகஜரை கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெளத்தர்கள் இல்லாத மாணிக்கமடு பிரதேசத்தில் நூறுவீதம் தமிழ் மக்களின் குடியிருப்புக்களைக் கொண்டதுடன், மலையைச் சற்றி வர முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளும் அமையப்பெற்றதே மாயக்கல்லி மலையாகும்.
சிறுபான்மை மக்களின் உரிமைக் குரலாகவும், பாதுகாப்பாகவும் அமைவோம் என்று சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான இனவாதப் பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாமல் இருந்து வருவதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
38 minute ago
46 minute ago
1 hours ago