Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 03 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில், பௌத்தர்கள், துப்பரவு பணிகளை மேற்கொண்டு சட்டவிரோதமாக தங்குமிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, அங்கு மீண்டும் சனிக்கிழமை (02) பதற்ற நிலை ஏற்பட்டது.
சில பௌத்த மத குருமார்களும் பௌத்த மக்களும் இணைந்து, தமிழ் நபரிடம் இருந்து காணியொன்றைக் கொள்வனவு செய்து, துப்பரவு பணிகளை மேற்கொண்டதாலும் தங்குமிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை சட்ட விரோதமாக மேற்கொண்டுள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலை தோன்றியது.
குறித்தச் சம்பவத்தை ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் விஜயம் மேற்கொண்டு, குறித்த மத அமைப்பின் பிரதிநிதிகளுடனும் பாதுகாப்பு படையினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அங்கு நடைபெற இருந்த வேலைத்திட்டங்களைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இது தொடர்பாக நேரடியாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.
அதனைத் தொடந்து, குறித்த பதற்ற நிலை அமைதியான நிலைக்கு திரும்பியதுடன் இது தொடர்பான விரிவான ஆராய்வுகளும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதுடன், அங்கு பௌத்த நபர்களால் மேற்கொள்ளவிருந்த செயற்பாடுகள் அனைத்தும் அமைச்சரின் தலையீட்டால் நிறுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
21 minute ago
47 minute ago
59 minute ago