2025 மே 03, சனிக்கிழமை

மாளிகைக்காடு கிழக்கு முடக்கப்பட்டது

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா, சர்ஜுன் லாபீர்

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, காரைதீவுப் பிரதேசத்துக்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்குப் பிரதேசம் இன்று (14) பிற்பகல் 2 மணியளவில் முற்றாக முடக்கப்பட்டது.

இப்பிரதேசத்திலிருந்து யாரும் வெளியேறவோ, உள்நுழையவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை கிடைக்கப்பெற்ற கொரோனா தொற்றின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்த காரணத்தால் இப்பிரதேசத்தில் சுகாதாரத் துறையினரால் காலை 100க்கும் மேற்பட்ட அன்ரிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அச்சோதனைகள் முடிவுற்று, மக்கள் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்துமுடிந்த பிற்பாடு, இப்பிரதேசம் முற்றாக முடக்கப்பட்டது.

இதன்படி, மாளிகைக்காடு மீன்வாடிப் பிரதேசம் தொடக்கம் கரைச்சை வரைக்குமான பிரதேசம் முற்றாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X