Janu / 2024 மே 05 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அட்டாளைச்சேனை - சம்புகளப்பு வீதிக்கு மின்சாரம் வழங்கும் வேலைத் திட்டம் உத்தியோகபூர்வமாக சனிக்கிழமை (04) திறந்து வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லஹ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண முதலமைச்சின் முன்னாள் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, அட்டாளச்சேனை உதவி பிரதேச செயலாளர் நஜிஹா முஸாபீர், பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.ஏ.அனிஸ், செயலாளர் எம்.எஸ்.எம். ஜௌபர் மற்றும் கல்வியியலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் நீண்ட கால தேவையாகவிருந்து இவ்வீதிக்கு மின்சாரம் இடப்பட்டமையையிட்டு மக்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கின்றனர்.
எம்.எப். றிபாஸ்

22 minute ago
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
2 hours ago