2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மின்னல் தாக்கி ஒருவர் பலி

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 செப்டெம்பர் 17 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, இறக்காமம்  பிரதேச செயலகத்துக்குட்பட்ட வரிப்பத்தான்சேனை பள்ளச்சேனைப் பிரதேசத்தில், நேற்று சனிக்கிழமை (16) இரவு 7 மணியளவில் மின்னல் தாக்கி சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்துள்ளாரென, தமன பொலிஸார் தெரிவித்தனர்.

 

இறக்காமம் வரிப்பத்தான்சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.பைறூஸ் (வயது-33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், கரும்புக் காணியில் வேலை செய்துகொண்டிருக்கும் வேளையிலேயே, மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளாரென,  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .