2025 மே 07, புதன்கிழமை

மின்மாற்றியை வேறிடத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, நற்பிட்டிமுனை பொதுச் சந்தைக்கு அருகாமையில் நீண்ட காலமாக வைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை வேறிடத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த  கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல். றபீக்,   நற்பிட்டிமுனை பிரதான வீதி பொதுச் சந்தைக்கு அருகாமையில் நீண்டகாலமாகவுள்ள மின்மாற்றியினால் மக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாக  தெரிவித்தார்.

இம் மின்மாற்றி பொதுச் சந்தைக்கு அருகாமையில் காணப்படுவதால் சந்தைக் கட்டடத் தொகுதி இது வரை மக்கள் பாவனைக்கு விடப்படாமல் காணப்படுவதாகவும், இதனால் நற்பிட்டிமுனை கிராம மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  கேட்ட  அவர்,  மேற்குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு மின்மாற்றியை இடமாற்றி சீரான போக்குவரத்திற்கு வழிவகைகளை ஏற்படுத்தித் தருமாறும் கேட்கப்பட்டுள்ளதாகவும், கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X