பி.எம்.எம்.ஏ.காதர் / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

மருதமுனை கடல் பரப்பில் நேற்று (17) நிலவிய கடும் காற்றுடன் கூடிய கடல் கொந்தளிப்புக் காரணமாக, கரவலைத் தோணியொன்று கடலில் மூழ்கியதென, மீனவர்கள் தெரிவித்தனர்.
மீன்பிடிக்கச் சென்ற மருதமுனையைச் சேர்ந்த மீனவர்கள் பயணித்த குறித்த கரவலைத் தோணி, காலை 11 மணியளவில் கடலில் மூழ்கியது. எனினும், தோணியில் பயணித்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள்.
பின்னர் பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் தோணியையும் அதில் பயணித்தவர்களையும், மதியம் 1.30 மணியளவில் பொதுமக்கள் கரைசேர்த்தனர்.
ஸ்தலத்துக்கு விரைந்த கல்முனை பொலிஸார் வந்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.

4 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago