2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீட்டு

வி.சுகிர்தகுமார்   / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கோவில் ஸ்ரீ முருகன் புகழ்பாடும் பக்தி இறுவட்டு, ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில், ஆலய வளாகத்தில் அமைந்துள்ள திருமூலர் அன்னதான மண்டபத்தில், நாளை (08) மாலை 04.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

இந்த இறுவட்டானது, திருக்கோவில் ஏ.எஸ்.கே.திருவதிகைக் கலைக்கூடத்தின் வெளியீடாக வருவதுடன், இறுவட்டிலுள்ள அனைத்துப் பாடல்களையும், திருக்கோவிலைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.எஸ்.கார்த்திகேசு எழுதி உருவாக்கியுள்ளதுடன், பாடல்களுக்கான இசையை, பிரம்மஸ்ரீ இரா. நீதிராஜசர்மா வழங்கியுள்ளார்.

பாடல்களை, கின்னஸ் பாடுநிலா உலகப்புகழ் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மற்றும் ஸ்டான்லி (இந்தியா), நிவாசின் சக்திவேல் (இந்தியா), நீதிராஜசர்மா, நீ.குருபரன்சர்மா (இலங்கை) ஆகியோர் பாடியுள்ளனர்.

இவ்வெளியீட்டு விழாவின் ஆசிர்வாதப் பூஜைகளை, ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் நடத்தி வைக்கவுள்ளார்.

நிகழ்வில் ஆன்மீக அதிதியாக, இந்தியா தபோவனம் ரிஷிகேசம் இமயமலை சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் கலந்து கொள்வதுடன், பிரதம அதிதியாக, நிதியமைச்சின் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X