2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முஸ்லிம் எம்.பிக்கள் முட்டுக்கட்டை

Princiya Dixci   / 2021 ஜூன் 14 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

அதேவேளை, தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை எனவும் அவர் தெரிவித்தார்.  

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை-2 கிராமத்தில், சலவைத் தொழிலாளிகள் தொழிலை மேற்கொள்ளும் தோணாவை சில முஸ்லிம்கள் மண் இட்டு நிரப்பி ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரியவருகின்றது.

இந்தப் பகுதிக்கு, நேற்று (13) சென்ற பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், அதனைத் தடுத்து நிறுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதற்குரிய செயற்பாடுகளையும் மேற்கொண்டார்.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .